இப்போது குளிர்காலம் என்றாலும் கொசுத்தொல்லை தாங்க முடியவில்லை. பெரியவர்களை விட சிறு குழந்தைகள் இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
சின்ன கொசுதான் என்றாலும், அதனால் பெரிய பெரிய நோய்கள் ஏற்பட்டு விடுகின்றன.இந்த கொசு மூலம் பரவும் நோய்களை தடுப்பது எப்படி?
* கொசுக்கள் அதிகம் நிறைந்த பகுதிகளில் வசிப்பவர்கள், படுக்கையை சுற்றிலும், கொசு வலை கட்டுவதோடு, ஜன்னல் களிலும் வலை பொருத்தலாம்.
* கொசு உற்பத்திக்கான காரணிகளை தவிர்க்க வேண்டும். அதாவது, ஏர் கூலர்களில் தண்ணீர் தேங்காமல் கவனித்துக் கொள்ள வேண்டும்.
* தோட்டம், குடியிருப்பு மற்றும் அருகில் உள்ள பகுதிகளிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
* நீங்கள் வசிக்கும் பகுதியில் கொசுக்கள் அதிகளவில் காணப்பட்டால், வாசனையற்ற கொசுவர்த்திகள் போன்றவற்றை வாங்கி பயன்படுத்தலாம். சிலருக்கு இந்த வாசனை, அலர்ஜியை ஏற்படுத்தி விடலாம். அதனால் தரமான-பாதுகாப்பான கொசுவர்த்தியை தேர்வு செய்யுங்கள்.
* டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் பகல் நேரத்திலும், மலேரியாவை பரப்பும் கொசுக்கள் மாலை நேரத்திலும் கடிக்கும். அதனால், இந்த நேரங்களில் கூடுதல் விழிப்புடன் இருப்பது அவசியம். குறிப்பாக, இந்த நேரங்களில் மேற்படி கொசுக்கள் குழந்தைகளை கடிக்காமல் பாதுகாப்பது முக்கியம்.

No comments:
Post a Comment