Friday, February 18, 2011

ஆரோக்கிய வாழ்வுக்கு ஏற்ற உணவுகள்

இன்று நாம் அனைவருமே வாழ்க்கை ஓட்டத்தில் தொடர்ந்து ஓடிக்கொண்டு தான் உள்ளோம். நீண்ட நேர வேலை, இரவில் கண் விழிப்பு, மன அழுத்தம், உடல் நல பிரச்சனைகள், குடும்ப மற்றும் வீட்டு பொறுப்புகள் என நம்மை அழுத்தும் சுமைகள் ஏராளம்.

வாரம் முழுவதும் தூக்கத்தை தொலைத்து வேலை செய்து,வார இறுதி விடுமுறை நாளில் சற்று தூங்கி, தூக்க இழப்பை ஈடுகட்டினாலும்,உணவு விடயத்தில் ஃபாஸ்ட் புட் வகையறாக்களை உள்ளே தள்ளி,அது உடலுக்கு நல்லதா அல்லது கெட்டதா என்பதே தெரியாமல் மன உளைச்சலுக்கும் ஆளாக நேரிடுகிறது.

ஆனாலும் உங்களை நம்பிக்கை இழக்காமல் இருக்க செய்யும் வகையில் ஊட்டச்சத்துகள், வைட்டமின்கள்,தாதுக்கள் அடங்கிய இயற்கை சக்தி நிறைந்த உணவுகளும் இருக்கத்தான் செய்கின்றன.

அதிக மெனக்கிடுதல் இல்லாமல்,எளிதில் கிடைக்க கூடிய அந்த இயற்கை உணவு பட்டியல் இதோ:

ஆப்பிள்:

இதன் பலனை பற்றி நம் எல்லோருக்கும் தெரியும் என்றாலும், நடைமுறையில் விலை அதிகம் என்று தூரமாக ஒதுங்கிப்போகிறவர்கள்தான் அதிகமாக உள்ளனர்.ஆனால் அவர்களே கடைகளில் செயற்கை முறையில் தயாரித்து விற்கப்படும் ஸ்வீட் மற்றும் கார வகையறாக்களுக்கு கணக்கு பார்க்கமால பணம் கொடுத்து வாங்கி உள்ளே தள்ளத்தான் செய்கின்றனர்.

" தினமும் ஒரு ஆப்பிள் உட்கொள்வது டாக்டரை கிட்ட வரவிடாது" என்பது வெறும் சொலவடை மட்டுமல்ல.நூற்றுக்கு நூறு உண்மை.அந்த அளவிற்கு உடலின் ஜீரணத்திற்கு உதவும் நார்சத்து,வைட்டமின் ஏ, சி, மற்றும் ஈ, பாஸ்பரஸ், மெக்னீசியம், பொட்டாசியம் போன்றவை ஆப்பிளில் அடங்கியுள்ளன.மேலும் புற்றுநோய் வரவிடாமல் தடுக்கும் ஆற்றலும் அதற்கு உண்டு.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...