பித்தப் பிரச்சனைகள் தீர எளிய வழிகள்:
இஞ்சித் துண்டு தேனில் ஊறவைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தெளிந்து ஆயுள் பெருகும். இஞ்சிச் சாறு, வெங்காயச் சாறு தேன் கலந்து குடித்தால் பித்த மயக்கம் தீரும்.
மழைக்காலப் பராமரிப்பு அவசியம்:
மழைக்காலம் தொடங்கி விட்டது. கடந்த ஒரு சில வாரங்களாக மழை பெய்து கொண்டே இருக்கிறது. மழையில் நமது உடலை மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது அவசியம். மழைக் காலத்தில் எளிதாக நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது. எனவே, ஒவ்வொரு செயலையும் மிகுந்த கவனத்துடன் செய்ய வேண்டும். கண்ட இடத்திலும் தண்ணீர் குடிக்கக் கூடாது. அடிக்கடி தலைக்கு குளிக்காமல் இருப்பதும் நல்லது. குளிப்பதற்கு முன்பு தேங்காய் எண்ணெய் தடவி பிறகு குளிக்கலாம். குளிர்ந்த நீர் அல்லாமல் வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம். குளிக்கும் நீரில் ஒரு கைப்பிடி வேப்பிலை போட்டு குளித்தால் கிருமிகள் ஒழியும். பெண்கள் மஞ்சள் தேய்த்து குளிக்கலாம். மஞ்சள் நல்ல கிருமி நாசினியாக செயல்படும். மழையில் நனைந்து ஈரமான துணியுடன் இருந்தால் உடலுக்கு கெடுதலைப் பயக்கும். உடனடியாக ஈரத் துணியை மாற்றிவிட்டு, கை, கால் பகுதிகளில் தேங்காய் எண்ணெய் தேய்த்து கழுவி விடலாம்.
வேர்க்கடலையின் மகத்துவம்:
உயர்ந்த புரத சத்து நிறைந்த உணவில் சோயா பீன்சிற்கு அடுத்தபடியாக வேர்க்கடலை இடம்பெறும். அதில்லாமல், பாஸ்பரஸ், கால்சிம், இரும்புச்சத்து, வைட்டமின் ஈ, நியாஸின் போன்ற வைட்டமின்களும் அதிகப்படியாக வேர்க்கடலையில் இடம்பெற்றுள்ளது. எல்லாவிதமான ரத்தப்போக்கை தடுக்கும் சக்தியும் வேர்க்கடலைக்கு உண்டு. அதனால், பெண்கள் மாதவிடாய்க் காலத்தில் வேர்கடலை சாப்பிடுவது நல்லது. வயிற்றில் பிரச்சினை உள்ளவர்கள், உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், சாப்பாட்டு நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்பாக ஒரு கைப்பிடி அளவு வறுத்த வேர்கடலையைச் சாப்பிடலாம். வேர்க்கடலை சாப்பிட்டதும், சர்க்கரை சேர்க்காத காபி அல்லது டீ அருந்தவும். பசித்த பிறகு சாப்பிடச் சென்றால் குறைவான அளவே சாப்பிட முடியும். இதனால் உடல் எடை குறையும். வேர்க்கடலையில் உள்ள நியாஸின், தோலில் உள்ள புண்கள், கொப்புளங்கள் ஆற உதவுவதோடு, இவை வராமல் முன்கூட்டியே தடுக்கவும் செய்கிறது. தோலை பளபளப்பாக்குவதிலும் வேர்க்கடலைக்கு முக்கிய பங்கு இருக்கிறது.
பல நோய்களுக்கு மருந்தாகும் ஏலக்காய்:
பலர் சூயிங்கம் சாப்பிடுவார்கள். இதனால் எந்த பலனும் இல்லை. ஆனால் அதற்கு பதிலாக ஏலக்காயை வாயில் போட்டு மென்று சாப்பிடலாம். பசியே ஏற்படுவதில்லை, சாப்பிட பிடிக்கவில்லை என்று கூறுபவர்கள், தினமும் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்றால், பசி எடுக்கும். ஜீரண உறுப்புகள் சீராக இயங்கும். நெஞ்சில் சளி கட்டிக் கொண்டு மூச்சு விட சிரமப்படுபவர்களும், சளியால் இருமல் வந்து, அடிக்கடி இருமி வயிற்றுவலி வந்தவர்களுக்கும் கூட ஏலக்காய் நல்ல மருந்தாக அமையும். ஏலக்காயை மென்று சாப்பிட்டாலே, குத்திரும்பல், தொடர் இருமல் குறையும். வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கும் ஜீரண உறுப்புகளில் ஏற்படும் பிரச்சினை தான் காரணம். எனவே வாய் துர்நாற்றத்தைப் போக்க ஏலக்காயை மென்று சாப்பிட்டு வரலாம். சாப்பிடும் உணவு வகைகளில் சிறிது ஏலக்காயை சேர்த்துக் கொள்வது நல்லது. அதிகமாக சேர்த்துக் கொள்ளக் கூடாது.
வீட்டிலிருக்கும் மருந்து பொருட்கள்:
கொசு கடித்தபின் ஏற்படும் அரிப்பிலிருந்து நிவாரணம் பெற, கொசு கடித்த இடத்தில் சிறிது சோப்பைத் தடவினால் உடனடி நிவாரணம் கிடைக்கும். மிளகைப்போட்டு வைத்த கஷாயத்தைக் குடித்து வந்தால் ஜுரம் குணமாகும். மிளகுப்பொடி, நெய், சர்க்கரை, தேன் ஆகியவைகளைக் கலந்து சாப்பிட்டால் இருமல் நிற்கும். சாப்பிடும்போது நெய்யில் வறுத்த ஏழெட்டு மிளகுகளை முதலில் சாப்பிட்டால், அஜீரணம், வயிற்று வலி முதலியன வராது. உணவோடு இஞ்சி சேருவதால் சாப்பிட்ட உணவு சுலபமாக ஜீரணமாகிறது. இஞ்சித் துவையலை சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் வராது. வயிற்று வலி நிற்கும். ஜுரம் வந்து குணமானவர்களுக்கு இஞ்சித் துவையல் செய்து கொடுக்கலாம். இஞ்சி துவையல் சாப்பிட்டால் வாய் கசப்பு போய், நாக்குக்கு சுவை கிடைக்கும்.

No comments:
Post a Comment