Wednesday, February 23, 2011

முடி ஏன் உதிர்கிறது?

முடி கொட்டுவது என்பது நாம் எண்ணுவதை விட மிகச் சாதாரணமானது. பல நேரங்களில் அது தற்காலிகமானதாகவும், சில நேரங்களில் நிரந்தரமானதாகவும் இருக்கலாம்.

தலை வாரும்போது முடி கொத்தாகக் கையோடு வருகிறதா? வாஷ்பேஸின் முழுக்க முடியாக இருக்கிறதா? நேற்று வரை உங்கள் தோற்றப் பொலிவிற்கு உதவிய உங்கள் கேசம் இன்று கலகலத்துத் தட்டையாக தோற்றமளிக்கிறதா? பதட்டப்படாதீர்கள். முடி கொட்டுவது பெண்களிடையே இயல்பாக ஏற்படக்கூடிய ஒன்று தான். முடி கொட்டுவதும் மறுபடி முளைப்பதும் நடைமுறைச் செயல்கள். நாம் ஒவ்வொருவரும் தினமும் 50 முதல் 300 முடிவரை இழக்கிறோம். இதில் வேதனைப்பட எதுவுமில்லை.

வேதனைப்படுவதைத் தடுக்க முடியவில்லை என்றால் இதோ ஒரு ஆறுதல். கொட்டுகின்ற முடிகளில் ஒன்றிரண்டை எடுத்து முடியின் வேர்ப்பகுதியை உற்று நோக்குங்கள். மிக மெலிதான நுண்ணிய வெள்ளை உருண்டை ஒன்று இருக்கிறதா என்று பாருங்கள். அவ்வாறு ஒரு சிறிய வெள்ளை உருண்டை இருந்தால் உங்கள் முடி இயல்பாகவே இருக்கிறது. அதுபற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். அவ்வாறு இல்லாமல் போனாலோ அல்லது முடி இழப்பு மட்டுக்கு மீறி இருப்பதுடன் அது தொடர்ந்தாலோ நீங்கள் சரும நோயியலார் அல்லது முடியியலார் ஒருவரைக் கண்டு ஆலோசனை பெறுவது நல்லது.

இன்றைக்கு முடி கொட்டுவதைத்தடை செய்யக்கூடிய ஒரே மருந்து ரோகெய்ன் தான். இது வெளி நாடுகளில் மட்டுமே கிடைக்கிறது. ஒரு மாத காலத்திற்குப் பயன்படுத்தக்கூடிய அளவு ரோகெய்ன் மருந்தின் விலை சுமார் ரூ. 5000/ ஆகலாம். முடியியல் துறையினர் உணவில் கவனம் செலுத்தச் சொல்வதுடன் ஓய்வு, அமைதி, உற்சாகம் போன்ற மனநிலை தொடர்புடைய செய்கைகளின் பயனையும் மிதமான உடற்பயிற்சியின் தேவை பற்றியும் குறிப்பிடுவார்கள்.

பல நேரங்களில் கீழ்க்கண்ட ஏதாவதொரு காரணத்தாலும் முடி கொட்டக் கூடும். ஆனால் இது தற்காலிகமானது தான். முயன்றால் தவிர்த்துவிட முடியும்.

இறுக்கமும், இழுவையும்:

முடியை இறுக்கமாகவும், இழுத்துப் பிடித்தும் கட்டுகின்ற போதும், பின்னல் போடும் போதும் முடி பிடுங்கிக் கொண்டு வர வாய்ப்பிருக்கிறது. எனவே போனிடெயில் போடுகிறவர்களும், இழுத்துப் பின்னலிடுகின்றவர்களும் கவனமுடன் இருக்க வேண்டும்.

ஹார்மோன் ஏற்றத்தாழ்வு:

உடலில் ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கின்ற போது முடி அடர்த்தியாகவும், கருமையாகவும் முளைக்கும். கருவுற்றிருக்கும் காலத்தில் முடி கொட்டாமலிருப்பதற்கு இந்த ஹார்மோன் அளவு உயர்ந்திருப்பதே காரணம். குழந்தை பிறந்த பின்னர் முடி கொட்டுவதற்குக் குறைந்து விட்ட ஹார்மோன் காரணமாகிறது. ஆனால் இது ஐந்தாறு மாதங்களிலோ அல்லது ஓராண்டிலோ சரியாகலாம். அதே போன்று நடுவயதுப் பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோன் சுரப்புக் குறைவதால் முடி எளிதாகக் கொட்டுவதுடன் அடர்த்தியும் குறைந்து விடுகிறது.

சோகை / காய்ச்சல்கள் / கருத்தடை மருந்துகள்:

உடலில் இரத்தம் குறைவாக இருந்து சோகை நோய் காணப்பட்டாலோ, அல்லது டைபாய்டு, மலேரியா, நிமோனியா போன்ற நோய்களில் அடிபட்டு மீண்டிருந்தாலோ அன்றி வாய்வழி மற்றும் ஊசிவழிக் கருத்தடை மருந்துகளைப் பயன்படுத்தி இருந்தாலோ முடி கொட்டுவதற்கு வாய்ப்புக்கள் உண்டு, மேற்குறிப்பிட்ட காரணங்கள் எதானலாவது முடி கொட்டுகிறது என்று நீங்கள் சந்தேகப்பட்டால் உங்கள் மருத்துவரிடம் கலந்து ஆலோசனை பெறுங்கள்.

உணவு:

முடியின் வளர்ச்சியில் உணவின் பங்கு கணிசமாகவே உள்ளது. பெண்கள் தங்கள் உணவு முறைகளை அடிக்கடி மாற்றுவதனாலும், அளவுக்குக் குறைவாக உண்பதாலும் உணவில் ஊட்டச் சத்துக்கள் விட்டமின்கள் குறைவாக இருப்பதாலும் முடி கொட்டக் கூடும்.

முடி உதிர்வதை தவிர்ப்பதற்கான சில எளிய வழிமுறைகள்:

1. தினசரி காலை எழுந்தவுடன் 15 நிமிடங்களுக்கு விரல் நுனிகளால் தலையில் நன்றாக மசாஜ் செய்யவும். இது வேர்க்கால்களுக்கு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும் வேர்க்கால் பலஹீனத்தைப் போக்கும்.

2. நெல்லிக்காய் சேர்ந்த தேங்காய் எண்ணையில் தயாரிக்கப்பட்ட கேசத் தைலத்தை உபயோகப்படுத்தவும். இது முடி உதிர்வதை தடுக்கும், முடிக்கு தேவையான வைட்டமின் "சி" சத்துக்களையும் அளிக்கும்.

3. தினசரி காலையும், இரவும் ஒரு தேக்கரண்டி அளவு நெல்லிக்காய் பவுடரையும், கரிசலாங்கண்ணி பவுடரையும் தண்ணீர் அல்லது பாலில் கலந்து குடித்து வர நல்ல பலன் தெரியும். இது முடியை கருமையாகவும், அடர்த்தியாகவும் வளரச் செய்யும்.

4. சம அளவு பச்சை நெல்லிக்காயையும், மாங்காயையும் சேர்த்து கூழ் போல் அரைத்து காலை குளிப்பதற்கு அரை மணி நேரம் முன்பாக தடவி பின்னர் எப்பொழுதும் போல குளிக்கவும். இது முடிக்கு பலத்தையும் கிருமி நாசினி தன்மையையும் அளித்திடும். மேற்கூறியவற்றுள் வசதிக்கேற்ப ஒன்றிரண்டு முறைகளை கையாளலாம்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...